Wednesday, 21 February 2018

பிளாக் பேந்தர் விமர்சனம்



ஒரு flash back க்குடன் படம் துவங்குகிறது, விண்ணில் இருந்து விழுந்த விண்கல் மூலம் வகான்டா நாட்டுக்கு vibranium தனிமம் கிடைக்கிறது, அதை வைத்து அந்த நாடு மிகப் பெரிய முன்னேற்றம் அடைகிறது, King டச்சாக்கா அந்நாட்டை ஆட்சி செய்யும் போது அவரது சகோதரர் செய்யும் துரோகத்தினால் எதிர்பாராத வகையில் டச்சாக்காவால் கொல்லப்படுகிறார், அவரது மகன்தான் killmonger
அதிலிருந்து தற்போதய காலத்தில் படம் துவங்கிறது
Captain America civil war படத்தில் காட்டியபடி டச்சாக்கா இறந்த சில நாட்களுக்கு பிறகு அவரது மகன் டச்சலா அரசுக்கு உரிமை கோருகிறார், ஆனால் வகான்டாவின் வழக்கப்படி அங்கு முதன்மை பெற்று இருக்கும் பல்வேறு இனங்களில் அரசனாக போட்டியிட விரும்பும் வீரர்களுடன் போட்டி சண்டையிட்டு வெல்ல வேண்டும், அதன்படி வென்று அரசராகிறார்
இடையே பிரபல vibranium கொள்ளைகாரர் klaue வை பிடிக்க கொரியா செல்கிறார், ஆனால் அங்கு வந்த killmonger, klaue வை பிடித்து வகான்டாவிடம் ஒப்படைத்து அரசனாக உரிமை கோருகிறார், அதுமட்டுமின்றி வகான்டாவின் வளங்களையும், தொழில்நுட்பங்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முற்படுகிறார், அதில் ஏற்படும் சண்டையில் அவர் வீழ்த்தபடுகிறாரா, வகான்டாவின் வளங்கள் காக்க படுகிறதா என்பது படத்தின் முடிவாக இருக்கிறது
நடிகர்கள்
படத்தில் chadwick baseman டச்சாலாவாகவும், Michael b Jordan, Erik killmonger ஆகவும், letitia Wright 😍😍😍டச்சலாவின் தங்கையாகவும், Danai guraira அரசனை பாதுகாக்கும் வீராங்கனையாகவும், Hobbit இனத்தை சேர்ந்த Martin Freeman, Andy serkis இருவரும் Ross மற்றும் klaue வாகவும், illegal entry புகழ் Dani, எல்லை காவலராகவும் தத்தமது பங்கேற்பை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள்
படத்தில் பலமே சண்டைகாட்சிகள்தான், Seoul ல் klaue வை பிடிக்க நடக்கும் சண்டை காட்சிகள் படத்தை பார்ப்பவர்களை இருக்கை நுனியில் கொண்டு வந்துவிட்டது, முப்பரிமாண காட்சியில் காணும் போது இங்கே பலர் குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர், இறுதி சண்டை மிக அட்டகாசம், அடுத்த வரும் Avenger வகான்டாவில் நடக்க இருப்பதால் இந்த சண்டையில் இருக்கும் காட்சியமைப்பின் தாக்கம் இல்லாமல் எடுப்பது மிக கடினமாகத்தான் இருக்க போகிறது, பல இடங்களில் சண்டை காட்சியை விட பின்னணி காட்சியமைப்பு மிக அருமை, குறிப்பாக அரசனுக்கான போட்டி நடக்கும் நீர் மைதானம் அட்டகாசம், Marvel ல் winter soldier படத்துக்கு பிறகு ஒரு முழு படமும் அற்புத இசையால் நிரம்பி வழிகிறது, இளம் அய்ரோப்பிய இசையமைப்பாளர் Ludwig goransson முத்திரை பதித்துள்ளார், சிறப்பான எதிர்காலம் உண்டு
எவ்வளவு தொழில்நுட்பங்களில் நிரம்பி இருந்தாலும் மக்கள் ஆப்பிரிக்க வரலாறுடன் இணைந்து நிற்பதாக காட்சி படுத்தியிருப்பது மிக அருமை, டைரக்டர் Ryan coogler அதை செதுக்கி வைத்து இருக்கிறார், மிகுந்த பாராட்டுக்குரியவர்
நெடுங்காலமாக அவர்கள் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவதாக கூறிவிட்டதால், இவ்வளவு technology க்கு பின் இருக்கும் வல்லுநர்களை பற்றி படத்தில் காட்டவில்லை, டச்சலாவின் தங்கை ஒருவர் மட்டுமே அந்த technology எல்லாவற்றுக்கும் பொருப்பாக காட்டப்படுவது சற்று நெருடலாக இருக்கிறது, இம்மாதிரியான சிறு குறைகளை தவிர்த்து இப்படம் மிக அருமையான படம்
Marvel ரசிகர்கள் மட்டும் இன்றி Action விரும்பிகள் அனைவரும் காண வேண்டிய படம், முக்கியமாக அற்புதமான DC character களை வைத்து மொக்கை படம் எடுக்கும் ஆட்கள் பார்க்க வேண்டிய படம், வாய்ப்பு உள்ளவர்கள் 3D ல் பாருங்கள், Marvel ல் எத்தனையோ படங்களை IMAX 3D ல் பார்த்து இருக்கிறேன், இந்த படத்தின் தொழில்நுட்ப தரத்தில் எந்த படமும் இருந்ததில்லை, really visual treat
படத்தில் ஒரு mid credit scene, மற்றும் post credit scene இருக்கிறது
Post credit scene ல் "winter is coming" ( spoiler )

No comments:

Post a Comment